×

1 லட்சம் மதிப்பு சிலை கொள்ளை

சென்னை, டிச. 4: சோழவரம் அடுத்த   செம்புலிவரம் கிராமத்தில் உள்ள சவுந்தரநாயகி சமேத வியாக்ரபுரீஸ்வரர்  கோயிலை நேற்று காலை திறந்து பூஜை செய்ய ஊழியர் அம்சா வந்தார். அப்போது கோயில் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது.  அதிர்ச்சியடைந்த அம்சா கோயில் பூசாரி குமார் மற்றும் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது கோயிலில் இருந்த பிரதோஷ மூர்த்தி அம்மாள் சிலை மற்றும் தீர்த்த பாத்திரம், பூஜைமணி, கலசம், குடம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கோயில் பொருளாளர் பார்த்திபன் சோழவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி மற்றும் போலீசார் கைரேகை நிபுணர்களுடன் வந்து, அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். கொள்ளை போன சிலை மற்றும் பொருட்களின் மதிப்பு ₹1 லட்சம் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 இடங்களில்...