×

உடன்குடி பகுதியில் சாலைகளில் சாகசம் செய்யும் ரோமியோக்கள்

உடன்குடி, டிச. 4:  உடன்குடி பகுதிகளில்  அதிநவீன இன்ஜின் கொண்ட டூவிலர்கள் அதிகளவில் உள்ளன.  அதிவேகம் கொண்ட டூவிலர்களை வைத்திருக்கும் இளைஞர்கள்  பள்ளி, கல்லூரி முடிந்து வரும் மாணவிகள் அருகில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை அடிப்பது,  சகாசம் செய்வது என தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக பயணிக்கின்றனர்.மேலும்  பஜார், பஸ்நிலையம் பகுதிகளில் அதிவேகத்தில் செல்வதால் பொதுமக்கள் பீதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து சமூகஆர்வலர்கள் போலீசாரிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடன்குடியில் உள்ள செல்போன், ஜவுளி, பைனான்ஸ், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் பணி முடிந்து செல்லும் போது டூவிலர் ரோமியோக்களால் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே போலீசார் கூடுதலாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பைக் ரேஸ்கட்டுப்படுத்தப்படுமா?உடன்குடியின் வெளிப்புறங்களில் நல்ல நிலையில் உள்ள சாலைகளில் விடுமுறை நாட்களில் மாலை, இரவு நேரங்களில் பைக் ரேஸ் நடக்கிறது. இதனால்  சாலைகளில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.பைக் ரேஸால்  விபத்துகள் தொடர்ச்சியாக நடந்து வருவது குறிப்பிடதக்கது.

Tags : roads ,area ,Udangudi ,
× RELATED வீட்டை பூட்டி மருமகள் சாவியை...