×

நிதி நிறுவனம் மோசடி பொதுமக்கள் எஸ்பியிடம் மனு

ஊட்டி, நவ. 30: தனியார் நிதி நிறுவனம் மோசடி செய்ததாக கூறி ஊட்டி எஸ்பி., அலுவலகத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  ஊட்டியை சேர்ந்த சுரேஷ் மற்றும் சிலர் மாவட்ட எஸ்பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, அவர்கள் எஸ்பி.,யிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:    சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிலரிடம் டெபாசிட் தொகையை பெற்றுக் கொண்டனர். சிலர் லட்சக் கணக்கில் பணத்தை கொடுத்துள்ளனர். இவர்களிடம் இருந்து டெபாசிட்டாக பெற்ற தொகைக்கான முதிர்வு தொகையை தர மறுத்து வருகின்றனர். நாங்கள் பலமுறை நேரடியாக சென்று கேட்ட போதிலும் தரவில்லை.

இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு நீலகிரி மாவட்ட எஸ்பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டு உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தொகையை திருப்பி கொடுக்க உத்தரவிட்டனர். சிலருக்கு மட்டும் பணத்தை திருப்பிக் கொடுத்த அவர்கள் பெரும்பாலானவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.   இதனால், பல லட்ச ரூபாயை நாங்கள் இழந்துள்ளோம். எனவே, இந்த நிறுவனம் மீதும், அதன் இயக்குநர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags : company ,SPP ,
× RELATED கோடிக்கணக்கான நன்கொடைக்காக...