×

இந்து முன்னணி நடத்தும் வீரலட்சுமி ரத யாத்திரை

சோமனூர்,நவ.30: கோவை கோட்ட இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டம் பெங்கலூரில் மஹாலட்சுமி மகா யாக குண்ட விழா டிசம்பர் 23, 24, 25, ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் கஜ பூஜை,அஸ்வபூஜை,கோமாதா பூஜை மற்றும் சோடஷ மஹாலட்சுமி மகா யாகமும் நடக்கிறது.மூன்று நாட்கள் நடைபெறும் யாகத்தில் ஒரு லட்சம் குடும்பங்கள் பங்கேற்க உள்ளது. யாகம் நடத்துவதற்காக கடந்த 13ம் தேதி கோவை காந்தி பார்க்கில் நான்கு வீரலட்சுமி ரதம் புரப்பட்டது, இவை கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு சென்று செங்கல் மற்றும் நெய் ஆகியவை தானமாக பெற்று வருகிறது.

வீரலட்சுமி ரதம் நேற்று இச்சிப்பட்டியில் துவங்கி அய்யன் கோவில், சாமளாபுரம், வழியாக சோமனூர் சுற்றுவட்டார பகுதிக்கு வந்தது. சோமனூர் பேருந்து நிலையம், பவர்ஹவுஸ், அரிமாநகர், கருமத்தம்பட்டி நால்ரோடு, கருமத்தம்பட்டி மாரியம்மன்கோவில்,  கிட்டாம்பாளையம், காடுவெட்டிபாளையம், வாகராயன்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு சென்றது.பொதுமக்கள் யாக ரதத்தை வரவேற்று பால் அபிஷேகம், மஞ்சள் நீர், கோமதா பூஜை, அபிஷேகங்கள் செய்தனர்.

Tags : Veeralakshmi Rama Pilgrim ,
× RELATED கடும் வெயிலால் வாடிய வாழைகள்