×

வாகராயம்பாளையத்தில் நிலவேம்பு கசாயம் விநியோகம்

சோமனூர்,நவ.30:சோமனூர் அடுத்த வாகராயம்பாளையத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டது. வாகராயம்பாளைத்தில் சமீபகாலமாக அதிகளவில் டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல் பரவி வருகின்றது. இதை தடுக்கும் வகையில் வாகராயம்பாளையம் பேரூராட்சியின் முன்னாள் துணைத்தலைவர் சசிகுமார் தலைமையில் அப்பகுதி இளைஞர்கள் வீடு,வீடாக சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் வாகராயம்பாளையம்,மோரிபாளையம், கருச்சிபாளையம் கணபதிநகர், சென்னப்பசெட்டிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் பத்தாயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளது.

Tags : landflow ,
× RELATED கூட்டுறவு வங்கி சார்பில் நிலவேம்பு கசாயம் விநியோகம்