×

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்

ஈரோடு, நவ. 30: சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் வரலாறு மீட்புக்குழு சார்பில் கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் வடிவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு அவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடமான நல்லமங்காபாளையத்தில் நினைவு சின்னம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்து அனுமதி அளிக்க வேண்டும், சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் சுட்டு கொல்லப்பட்ட இடமான நல்லமங்காபாளையம் அல்லது ஜெயராமபுரத்தில் மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 12ம்தேதி ஈரோடு ரயில்நிலையம் அருகே ஜவான்பவன் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், இதில் அனைத்து கட்சி இயக்க தலைவர்களும், நிர்வாகிகளையும் அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு தமிழக அரசு ஒருகோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரச்சலூரில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் டாக்டர் அம்பேருக்கு முழு உருவசிலை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆதிதமிழர் கட்சி மாவட்ட செயலாளர்கள் வீரகுமார், சதீஷ்பாபு, தமிழக வாழ்வுரிமை பேரவை அமைப்பாளர் விஜய்ஆனந்த், பொன்.சுந்தரம், ஆறுமுகம், சண்முகம் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags : freedom fighter ,memorial ,
× RELATED காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு