×

வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

ஈரோடு, நவ. 30:மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் 21 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், சம்மேளனங்கள் சார்பில் ஜனவரி 8 மற்றும் 9ம்தேதிகளில் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஈரோடு பெரியார் மன்றத்தில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மாநாட்டில் கோரிக்கைகளை விளக்கி மாநில செயலாளர் சின்னசாமி பேசினார்.

இந்த மாநாட்டில் ஜனவரி 8 மற்றும் 9ம்தேதிகளில் நடைபெறவுள்ள இரண்டு நாட்கள் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை ஈரோடு மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது, வேலைநிறுத்த போராட்டம் குறித்தும் மாவட்டம் முழுவதும் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொள்வது, டிசம்பர் 17 மற்றும் 22ம்தேதிகளில் வேலைநிறுத்தம் தொடர்பாக அனைத்து நிறுவனங்களுக்கும் கூட்டாக நோட்டீஸ் விநியோகம் செய்வது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, எல்பிஎப் மாவட்ட பொருளாளர் தங்கமுத்து, ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் தங்கராஜ், எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் சண்முகம், கோவிந்தராஜ், காளிப்பன், குணசேகரன் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags : Conference Convention ,
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு