×

சோனா தொழில்நுட்பக் கல்லூரி பெஸ்டோ நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சேலம், நவ. 30: சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி ஃபெஸ்டோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கல்லூரியின் முதல்வர் செந்தில் குமார் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா, ஃபெஸ்டோ நிறுவனத்தின் தலைவர் ஒல்கர்ஸ்மித் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் மெக்கட்ரனிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் மிகச் சிறந்த முழுமையான கற்றல் சூழலை வழங்க இரு நிறுவனங்களும் எவ்வாறு உள்கட்டமைப்பை உருவாக்க முடியும் என்பது  வரையறுக்கப்படும். நிகழ்ச்சியில் தியாகராஜர் பல்தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் கார்த்திகேயன், துறை தலைவர்கள், பேராசிரியர் சுரேஷ், நரேஷ் சுப்பையா ஆகியோர் கலந்துகொண்டனர்.  

Tags : Sona Tech College ,
× RELATED விஷ தேனீக்கள் அழிப்பு