×

காகாபாளையத்தில் 100 அடிக்கு முன் நிறுத்தி செல்லும் அரசு பஸ்களால் மாணவர்கள் அவதி

ஆட்டையாம்பட்டி, நவ.30:  காகாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். காகாபாளையம்-சேலம் செல்லும் வழியான ராக்கிப்பட்டி,  சீரகாபாடில முருகன்கோயில், அன்னபூர்ணா கல்லூரி பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களுக்கு அரசு பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. காலையில் பஸ்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் சிரமமின்றி மாணவர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் மாலை 4.30 மணியளவில் மகுடஞ்சாவடியில் இருந்து வரும் 30 எண் கொண்ட டவுன் பஸ்சில் செல்வதற்காக மாணவ, மாணவிகள் காத்திருக்கின்றனர். ஆனால் அந்த பஸ் டிரைவர் பஸ் நிறுத்தத்திற்கு 100 அடிக்கு முன்பாகவே பஸ்சை நிறுத்தி ஆட்களை இறக்கி விட்டு செல்கிறார். இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். சில மாணவர்கள் ஓடிச்சென்று அந்த பஸ்சில் ஏறி கீழே விழுந்து காயமடை யும் சூழலும் உள்ளது. அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பிலும், பெற்றோர் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : state ,bachelor students ,Alaska ,
× RELATED உயர் ரத்த அழுத்த அபாயத்தில் இருந்த...