×

சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதியில் 14 நாட்களாக மின்சாரமின்றி இருளில் மூழ்கிய கிராமங்கள்

சேதுபாவாசத்திரம், நவ.30:   சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதியில் கஜா புயலின் கோர தாண்டவத்தால் மின்சாரம் இன்றி கிராம பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை 14 நாட்களாக முடங்கி கிடக்கிறது.  தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதிகளில் கடந்த 15ம் தேதி இரவு கரையை கடந்த கஜா புயல் ஆடிய கோர தாண்டவத்தில் தென்னை, வாழை, தேக்கு, கரும்பு என அனைத்தையும் சூறையாடியது. இதில் மின் கம்பங்பளையும் விட்டு வைக்கவில்லை. எண்ணிலடங்கா  மின்கம்பங்களை பதம் பார்த்தது. 100க்கும் மேற்பட்ட டிராஸ்ன்பார்மர்களை கீழே சாய்த்தது. இதனால் கடந்த 14 நாட்களாக அனைத்து கிராமங்களும் இருளில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்கை முடங்கிவிட்டது.

ஒரு வாரத்தில் மின் விநியோகம் வழங்கி விடுவோம் என அரசு அறிவித்து 14 நாட்களை கடந்துவிட்டது.  இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி மாவட்டத்தில் இருந்து வந்து இரவு, பகலாக வேலை பார்த்தாலும் இதுவரை துணை மின்நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளான சேதுபாவாசத்திரம் கடைவீதி வரையும், பேராவூரணி கடைவீதியில் ஒரு சில பகுதிகள் மட்டுமே மின்சாரம் கிடைத்துள்ளது. கிராம பகுதிகளுக்கு கிடைக்க எத்தனை நாட்கள் ஆகுமோ என்ற கேள்வி பொதுமக்களிடம் நிலவி வருகிறது. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாழ்க்கை சக்கரம் சுழன்று வருகிறது.

Tags : area ,Peravurani ,villages ,
× RELATED திருப்புவனம் பகுதியில் வெற்றிலை கொடிக்கால் விவசாயப் பணி தீவிரம்