×

ஆற்காடு இளவரசர் பட்டத்தை திரும்பப் பெறக்கோரி வழக்கு: மனுதாரரிடம் உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: ஆற்காடு இளவரசர் என்ற பட்டத்தையும், அவருக்கு வழங்கப்படும் சலுகைகளையும் திரும்பப் பெறக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரர் என்ன சமூக சேவை செய்துள்ளார் என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், தனது சேவை தொடர்பான விவரங்களை அவர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.  பெரம்பூரைச் சேர்ந்த குமாரவேலு என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்,  ஆற்காடு நவாப்புக்கு  ஆற்காடு இளவரசர் என பட்டமும், பல்வேறு சலுகைகளும்  இங்கிலாந்து அரசால் வழங்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து, ஜனநாயக குடியரசாக மாறியுள்ள நிலையில், தனிப்பட்ட நபருக்கு இளவரசர் பட்டத்தை எப்படி கொடுக்க முடியும்.

கடந்த 2005 முதல்  2016 வரை ஆற்காடு இளவரசர் வசிக்கும் அமீர் மஹாலுக்கு 2 கோடியே 74 லட்சத்தை மத்திய பொதுப்பணித்துறை செலவிட்டுள்ளது. அரசின் பணம் வீணாகக்கூடாது. எனவே, ஆற்காடு இளவரசருக்கு இளவரசர் பட்டம் மற்றும் சலுகைகளை திரும்பப் பெறுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜ மாணிக்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரரின் வக்கீலிடம், ‘‘சமூக ஆர்வலர் என கூறி மனு தாக்கல் செய்துள்ள மனுதாரர் என்னென்ன சமூக சேவைகள் செய்திருக்கிறார்  என்பது குறித்து கூடுதல் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி மாதத்திற்கு  தள்ளி வைத்தனர்.

Tags : Supreme Court ,petitioner ,withdrawal ,Prince ,Arcot ,
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...