கல்லூரி மாணவர்கள், வியாபாரிகளுக்கு சப்ளை 2 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கும்பல் கைது

களியக்காவிளை, நவ.29: குழித்துறை சந்திப்பில் உள்ள சந்து பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருப்பதாகவும், கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அங்கு வந்து கஞ்சா வாங்கி செல்வதாகவும் களியக்காவிளை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ மோகன ஐயர் தலைமையிலான போலீசார் குழித்துறை பகுதிக்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் ஒரு கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதை கவனித்த போலீசார் பொதுமக்களின் துணையோடு அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

இதில், அவர்கள் நாகர்கோவில் கட்டையன்விளையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (52), வீயன்னூர் செட்டிச்சார்விளை பகுதியை சேர்ந்த ஆன்றோ ஜெயின் (20), அருமனை அழிவுத்தோட்டம் பகுதியை சேர்ந்த பீட்டர் சாஜன் (19), வேர்க்கிளம்பியை அடுத்த செங்கோடி பகுதியை சேர்ந்த அபினாஷ் (19), திருவரம்பு பகுதியை சேர்ந்த இர்வின் (20) என ெதரியவந்தது. இவர்கள் கடந்த சில வருடங்களாக மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் மொத்த வியாபாரிகளிடம் இருந்து கஞ்சா வாங்கிவந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இவர்களை பிடிக்க கடந்த சில மாதங்களுக்கு முன் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. தனிப்படை போலீசார் பல இடங்களிலும் அவர்களை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் களியக்காவிளை ேபாலீஸ் பிடியில் சிக்கினர். இவர்களிடம் இருந்து சிறு சிறு பொட்டலங்களாக வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : kanja ,college students ,
× RELATED கருப்பம்பாளையம் காசா காலனியில்...