×

ஓசூர் வட்டாரத்தில் ராகி அறுவடை தீவிரம்

ஓசூர், நவ.29:  ஓசூர் வட்டார கிராம பகுதிகளில் ராகி அறுவடை பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. ஓசூரில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் ராகி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, ஓசூர் பகுதிகளில் ராகி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டு ராகி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஓசூர் வட்டார பகுதிகளில், ராகி அறுவடை பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. சந்தையில் 50 கிலோ கொண்ட ராகி மூட்டைக்கு ₹2,500 முதல் ₹3 ஆயிரம் வரை விலை கிடைக்கிறது. ஓராண்டிற்கு முன் ஒரு மூட்டை ராகி ₹1000க்கு தான் விற்றது. இந்த ஆண்டு ₹3 ஆயிரம் வரை விலை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது,’ என்றனர்

Tags : Ragi ,area ,Hosur ,
× RELATED குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால் மூச்சுச்திணறல்