×

ஓசூர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணி மந்தம்

ஓசூர், நவ.29: ஓசூரில் குடியிருப்பு பகுதியில், மந்த கதியில் நடக்கும் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூரில் உள்ள ஏஎஸ்டி அட்கோ குடியிருப்பில், நூற்றுக்கும் ேமற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்ற, சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால், பணிகள் தொடங்கி நீண்ட நாட்கள் ஆகியும், கழிவுநீர் குழாய் பதிக்க கால தாமதமாகி வருகிறது. அதேபோல் பிரதான சாலையில் தோண்டப்பட்ட கால்வாய், மூடப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து திமுக மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார் கூறுகையில், ‘இந்த குடியிருப்பு கட்டிய போது 500 வீடுகள் இருந்த நிலையில், கழிவுநீர் செல்ல சிறிய குழாய்கள் போடப்பட்டது. தற்போது அதை விட 10 மடங்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதற்கு தகுந்தாற்போல் நகராட்சி நிர்வாகத்தினர் குழாய்களை மாற்றுகின்றனர். ஆனால், பல நாட்களாக இப்பணி நடப்பதால் பொதுமக்கள், முதியோர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னையை தீர்க்க, சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்,’ என்றார்.

Tags : area ,Hosur ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...