×

கிருஷ்ணகிரியில் திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி, நவ.29: கிருஷ்ணகிரியில் நகர, ஒன்றிய திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரியில் நகரம், கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நவாப் வரவேற்றார்.  கூட்டத்தில், நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் திருவிடைமருதூர் ராமலிங்கம் பங்கேற்று பேசினார்.

இதில், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்திரி கடலரசுமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொன்.குணசேகரன், தம்பிதுரை, நிர்வாகிகள் ராஜன், கோவிந்தன், கோவிந்தசாமி, பரிதாநவாப், வெங்கட்டப்பன், பழனி, ஆறுமுகம், தர்மன், கடலரசுமூர்த்தி, திருமலைச்செல்வன், சந்திரசேகரன், வாசுதேவன், நாகராஜ், பொன்.குணசேகரன், வஜீர், ஜமுனாபுருஷோத்தமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதே போல் பர்கூரில் நடந்த ஒன்றிய, பேரூர் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராசு தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் பாலன் வரவேற்றார். இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

காவேரிப்பட்டணம் : கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் காவேரிப்பட்டணத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ, கலந்து கொண்டார். கூட்டத்தில், ராஜன், மகேந்திரன், விவேகானந்தன், வக்கீல் விஸ்வபாரதி, சாஜித், பசுபதி, அரிநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,staffers consultation meeting ,Krishnagiri ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு