×

அரூர் ஆத்தோர வீதியில் கழிவுநீர் தேக்கத்தால் தொற்றுநோய் அபாயம்

அரூர், நவ.29:அரூர் ஆத்தோர வீதியில் சாக்கடை கழிவுகள் தேங்கியுள்ளதால், தொற்று ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரூர் பேருராட்சி 12வது வார்டில் ஆத்தோர வீதியில், 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வாணியாற்றின் கரையோரங்களில் இப்பகுதி மக்கள் வசித்து வருவதால், அரூரில் சேகரமாகும் கழிவுநீர், ஆற்றில் கலந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாததால், கழிவுநீர் தேங்கி சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு, தொற்று ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாக்கடையை தூர்வாரக்கோரி, ேபரூராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். எனவே, உடனடியாக சாக்கடைகளை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Ara Aurora ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி