×

தாம்பரம் நகராட்சி சார்பில் 20 லட்சத்தில் நாகை மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள்

தாம்பரம்: கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உட்பட 6 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த  மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடிநீர் உணவு இன்றி கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் இருந்த பல்வேறு  தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், அரசியல் கட்சியினர் புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர். இந்நிலையில்,  தாம்பரம் நகராட்சி சார்பில் புயல் பாதித்த நாகை மாவட்டத்திற்கு 20 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.  

அரிசி, துணிகள் உட்பட 16 பொருட்கள் கொண்ட 2 ஆயிரம் தனி பைகள் போடப்பட்டு 3 வேன்களில் நிவாரண பொருட்களை நகராட்சி ஊழியர்கள் 5  பேர், நாகை மாவட்டத்திற்கு கொண்டு சென்றனர். நிவாரண பொருட்கள் சென்ற வாகனங்களை தாம்பரம் நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி  கொடியசைத்து அனுப்பிவைத்தார். நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம்,  ஆய்வாளர் ஆல்பட் அருள்ராஜ், நகராட்சி மேலாளர் மேகலா மற்றும் அனைத்து நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : district ,Nagas ,Tambaram ,
× RELATED தாம்பரம் அருகே மதுபோதையில் தாறுமாறாக...