×

உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் கூட்ரோட்டில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

உத்திரமேரூர், நவ.29: உத்திரமேரூர் - செங்கல்பட்டு சாலையில் உள்ளது நெல்வாய் கூட்ரோடு.  இந்த நெல்வாய் கூட்ரோடைச் சுற்றி புதியதாக  பல்வேறு தனியார் நிறுவனங்கள், கல்வி மையங்கள் மற்றும் அதை சார்ந்த குடியிருப்புக்களும் உருவாகி வருவாகி வளர்ந்து வருகின்றன. இதன்  காரணமாக நெல்வாய் கூட்ரோடு பகுதியில் பலவகையான ஓட்டல்கள் உட்பட பல கடைகள் உள்ளன. இந்த கடைகளால் சாலையோரம் இருந்த  கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு காணாமல்போனது. இதனால் மழை காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி சாலை ஓரங்களில் உள்ள பள்ளங்களில்  தேங்குகிறது.

இந்நிலையில், அண்மையில் பெய்த மழையின் காரணமாக சாலையோரம் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இவ்வாறு தேங்கியுள்ள மழை  நீரில் நெல்வாய் கூட்ரோட்டில் உள்ள கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக்கழிவுகள் மற்றும் குப்பைகளை வியாபாரிகள் சாலையோர மழை  நீரில் வீசிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி பொது மக்களுக்கு பல்வேறு  தொற்றுநோய்களை பரப்புகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரசின் திடக்கழிவு மேளாண்மை திட்டம் இப்பகுதியில் முறையாக  செயல்படுத்தப்படுவதில்லை.

 மேலும் இங்கு கடை நடத்துபவர்கள் இரவு நேரங்களில் குப்பைகளை தேங்கியுள்ள மழைநீரில் கொட்டிவிட்டுச் சென்று விடுகின்றனர். இதனால்  அருகில் உள்ள வீடுகளில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத் தொல்லைகள் அதிகமாக உள்ளது. அதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட  தொற்றுநோய்களுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுகுறித்து பல்வேறு அதிகாரிகளுக்கு புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இங்கு தேங்கியுள்ள மழைநீரை அகற்றி  பிளாஸ்டிக் கழிவுகள்  மற்றும் குப்பைகளை அகற்ற நடவடிக்க்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Uthiramerur ,
× RELATED உத்திரமேரூர் - புக்கத்துறை இடையே ரூ54...