×

புதிதாக நியமிக்கப்பட்ட 100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி

பெரும்புதூர், நவ.29:  குன்றத்தூர் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் ஏரி,  வரவுக் கால்வாய், குளம், குட்டை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அந்தந்த ஊராட்சி செயலர் மற்றும் பணி தள  பொறுப்பாளர்கள் மூலம் பணி தேர்வு, ஊழியர்கள் கணக்கெடுப்பு ஊழியர்கள் சம்பளம் வழங்குதல், வேலை கணக்கீடு உள்ளிட்ட பணிகளை செய்து  வருகின்றனர். தற்போது ஒவ்வொரு ஊராட்சிக்கும் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பதிவேடுகளை பராமரிப்பதற்காக ஒருங்கிணைப்பாளர் பணி  ஏற்படுத்தப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பிலிருந்து தேர்வு செய்யபட்டுள்ளனர்.
 
இவர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ஊதியம் வழங்கபட உள்ளது. இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு  பதிவேடு பராமரித்தல், பணிகள் தேர்வு செய்வது குறித்த ஒருநாள் பயிற்சி நேற்று படப்பையில் உள்ள குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக  வளாகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் ஊரக வளர்ச்சி துறை காஞ்சிபுரம் மாவட்ட செயற்பொறியாளர் கவிதா கலந்து கொண்டு பயிற்சி  வழங்கினார்.

 நேர்முக உதவியாளர் (தேர்தல்) கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், சந்திரபாபு, உதவி பொறியாளர்கள் வசுமதி, சுப்புராஜ்  மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள்,   பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : workshop coordinators ,
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...