×

ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் சிந்தெடிக் ஹாக்கி மைதானம்

கோைவ, நவ.28: கோவை மாநகரில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சிந்தெடிக் தளத்தில் ஹாக்கி மைதானம் அமைக்க மாநகராட்சியால் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி 24வது வார்டு ஆரோக்கியசாமி சாலையில் உள்ள ஆர்.எஸ்.புரம் இருபாலர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிந்தெடிக் தளத்தில் சர்வதேச தரத்தினால் ஆன ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாநகராட்சியால் துவக்கப்பட்டது. மொத்தம் 92 மீட்டர் நீளம், 53 மீட்டர் அகலத்தில் இந்த சிந்தெடிக் ஹாக்கி மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் சிந்தெடிக் ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. நிதி பற்றாக்குறை காரணமாக இந்த பணி நிறுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஹாக்கி மைதானம் அமைக்க நிலுவைத்தொகை ரூ.3 ேகாடி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட உள்ளது. சர்வதேச தரத்தினால் ஆன தளம் அமைத்து முடித்தவுடன், அந்த தளத்தை சுற்றிலும் தடுப்பு வேலி போட்டு பாதுகாக்கப்படும். பின்னர், மைதானத்தை சுற்றிலும்  பார்வையாளர்கள் அமர கேலரி வசதி, மின்னொளி வசதி போன்ற அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகள் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் நடத்தப்பட்டு இப்பணிகளை மேற்ெகாள்ள தகுந்த நிறுவனம் தேர்வு செய்யப்படும். இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். 

Tags : Sinite Hockey Stadium ,
× RELATED ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட்சிட்டி...