×

சாய, தோல் தொழிற்சாலைகளில் ஆழ்குழாய் கிணறு மூலம் கழிவுநீர் வெளியேற்றம்

ஈரோடு, நவ. 28: ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து அதில் கழிவு நீரை வெளியேற்றி வரும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான சாய, தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு சில தொழிற்சாலைகள் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல் கழிவுநீரை நீர் நிலைகளிலும், ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நிலத்திற்கு அடியிலும் வெளியேற்றி வருவதாக புகார் உள்ளது.

இந்நிலையில் கொங்கம்பாளையத்தில் செயல்பட்டு வரும் சாய ஆலை மற்றம் தோல் தொழிற்சாலை ஆகியவை ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து கழிவு நீரை வெளியேற்றி வருவதாகவும், குறிப்பாக தோல் ஆலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இம்மாதத்தில் மட்டும் 2 முறை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : leather factories ,bore wells ,
× RELATED வாணியம்பாடி அருகே 2 தோல் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு