×

வெம்பக்கோட்டை-ஆலங்குளம் மார்க்கத்தில் ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாத சாலையோர தடுப்பு

சிவகாசி, நவ. 29: வெம்பக்கோட்டை-ஆலங்குளம் மார்க்கத்தில், சாலையோர தடுப்புகளில் விபத்து எச்சரிக்கை குறித்த ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாததால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. வெம்பக்கோட்டையில் இருந்து ஆலங்குளத்திற்கு செல்லும் சாலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்தப்பட்டது. இந்த சாலை வழியாக கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, திருவேங்கடம் ஆகிய ஊர்களில் இருந்து ஆலங்குளத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் ஆலை இருப்பதால், இந்த சாலை வழியாக தினசரி அதிகமான சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இது தவிர பள்ளி, கல்லூரி வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த சாலை பல இடங்களில் குறுகளாகவும், வளைவுகளாகவும் உள்ளன. சாலை குறுகலாகவும், வளைவாகவும் உள்ள இடங்களில் இருபுறமும் இரும்பு தடுப்பு அமைத்துள்ளனர். ஆனால், தடுப்புககளில் விபத்து எச்சரிக்கை குறித்த ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை. இரவு நேரங்களில் வரும் வாகனங்களில் வளைவுகளில் விபத்தில் சிக்குகின்றன.

குறிப்பாக வெம்பக்கோட்டை-ஆலங்குளம் இடையே கண்டியாபுரம் அருகே, சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்புகளை சுற்றிலும் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால், தடுப்புகள் இருப்பது தெரியாக, இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் விலகிச் செல்லும்போது தடுப்பில் மோதி விபத்தில் சிக்குகின்றன. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். சில மாதங்களுக்கு முன் சாலை தடுப்பில் டூவீலர் மோதி, இருவர் உயிரிழந்தனர். எனவே, வெம்பக்கோட்டை-ஆலங்குளம் மார்க்கத்தில் சாலையோர தடுப்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டவும், சாலையோர செடிகளை அகற்றவும் நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Alangulam ,
× RELATED அமராவதி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி