×

திருமயம் அருகே கோட்டையூரில் மின்சாரம், குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

திருமயம், நவ.28: திருமயம் அருகே கோட்டையூரில் மின்சாரம், குடிநீர் உடனே வழங்க வேண்டி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். புயல் காற்றினால் சேதமடைந்த மின்கம்பங்களை  சரி செய்ய உள்ளூர் மின் ஊழியர்களுடன் சேர்ந்து கிராம மக்கள், வெளி மாவட்ட  ஊழியர்கள் கடந்த 12 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செல்வாக்கு  மிகுந்த பிரமுகர் இருக்கும் தெரு, கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்க  காட்டும் ஆர்வத்தை மற்ற பகுதிகளுக்கு காட்டுவதில்லை என மக்கள் குற்றம்  சாட்டுகின்றனர். இதனால் குக்கிராமங்கள் இன்றளவும் மின் விநியோகமின்றி  சிரமப்பட்டு வருகின்றனர். அதே சமயம் ஒரு சில கிராம மக்கள் மின்  ஊழியர்களுக்கு பணம் கொடுத்து தங்களது கிராமங்களுக்கு கூட்டி செல்வதாக  புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் திருமயம் அருகே உள்ள கோட்டையூர் கிராம  மக்கள் மின்சாரம், குடிநீர் உடனே  வழங்க வேண்டி நேற்று மதியம் திருமயம்-ராயவரம் சாலையில் கோட்டையூர் விலக்கு அருகே சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து  மறியல் கைவிடப்பட்டது. இதே போல் செங்கீரை கிராமத்தில் ஒரு பகுதிக்கு மட்டும்  மின்சாரம் வழங்கப்பட்ட நிலை மற்ற பகுதிக்கு மின்சாரம் வழங்க அதிகாரிகள்  பாரபட்சம் காட்டுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் விரைவில் சாலை மறியல்  செய்ய உள்ளதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags : Kottaiyur ,Wayanad ,
× RELATED ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள்...