×

‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் மதுரை மாவட்டத்திற்குள் வந்து வைகை நீரை திறந்த விருதுநகர் விவசாயிகள்

திருமங்கலம், நவ.29: பாரைபத்தி கண்மாய்க்கு தண்ணீர் செல்ல வசதியாக பொதுப்பணித்துறையினர் அடைத்து வைத்த வைகை நீரை, மதுரை மாவட்டத்திற்குள் வந்து விருதுநகர் மாவட்ட விவசாயிகள் திறந்துவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைகை அணையில் இருந்து வரும் தண்ணீர் நிலையூர் கண்மாய் வழியாக சென்று திருப்பரங்குன்றம், திருமங்கலம் தாலுகாக்களில் உள்ள பல்வேறு கண்மாய்களை நிரப்பி வருகிறது. மதுரை மாவட்ட கண்மாய்கள் நிரம்பிய பின்பு விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாங்குளம், ஆவியூர் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும். இதனால் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் மிகவும் ஆவலுடன் வைகை நீரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது வைகை நீர் நிலையூர் கால்வாயிலிருந்து ஆணைக்குழாய் பிரிவு கால்வாய் வழியாக மதுரை மாவட்டத்தை சேர்ந்த எலியார்பத்தி, நல்லுார், ஆணைகுளம், பாரைபத்தி வழியாக விருதுநகர் மாவட்டமான மாங்குளம் கண்மாயை சென்று அங்கிருந்து ஆவியூர் கண்மாயை அடையவேண்டும். நேற்று திடீரென வைகையின் நீர்வேகம் குறைந்ததால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எலியார்பத்தி அருகேயுள்ள மேட்டுமடையை அடைத்தனர். இவ்வாறு செய்வதன் மூலம் எலியார்பத்தி கண்மாயிலிருந்து செல்லும் வைகைநீர் தாமதமாக திறந்தால் பாரைபத்தி கண்மாயை சென்றடையும் எனவும் அதன்பின்பு விருதுநகர் மாவட்ட கண்மாய்களுக்கு திருப்பிவிடலாம் எனவும் முடிவு செய்து அடைத்தனர். தகவலை அறிந்த விருதுநகர் மாவட்ட ஆவியூர் பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள் கிளம்பி மதுரை மாவட்டத்திற்குள் வந்து பொதுப்பணித்துறையினர் அடைத்து வைத்திருந்த மதகை திறந்துவிட்டனர். இதனால் எலியார்பத்தி கண்மாயிலிருந்து தண்ணீர் பாரைபத்தி கண்மாய்க்கு சென்றாலும் வேகம் இல்லாததால் குறைவான நீர் மட்டுமே சென்றது. இது குறித்து தகவல் அறிந்த பொதுபணித்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.இந்நிலையில் வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு குறைந்ததால் நேற்று சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் நிலையூர் கால்வாய்க்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரை அதிகாரிகள் நிறுத்தினர். இதனால் நிலையூர் கம்பிக்குடி கால்வாயில் வைகை நீர் செல்வது நின்றது என்பது குறிப்பிடத்தக்கது. வைகை நீர் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே மதுரை மாவட்ட விவசாயிகளுக்குள் மோதல் எழுந்துள்ள நிலையில் தற்போது விருதுநகர் மாவட்ட விவசாயிகளும் பிரச்னையை கிளம்புவதால் பொதுப்பணித்துறையினர் திணறி வருகின்றனர்.

Tags : Jyotitha Ratna ,KV Vidyadharan ,Madurai District ,Virudhunagar ,
× RELATED மதுரை மாவட்டம் பாலமேடு அருகே...