×

எஸ்எல்பி பள்ளி சூறை விவகாரம் சிசிடிவி கேமரா பதிவு ெகாடுத்தும் கண்டு கொள்ளாத போலீசார்

நாகர்கோவில், நவ. 28: எஸ்.எல்.பி பள்ளியில் கண்ணாடி உடைத்தவர்களை போலீசார் கைது செய்யாமல் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. நாகர்கோவில்  எஸ்எல்பி மேல்நிலைப்பள்ளி, 24 மணி  நேரமும் மக்கள் நடமாட்டம் மிகுந்த  பகுதியாகும். இதன் அருகிலேயே நீதிமன்றம்  அமைந்துள்ளது. இந்த பள்ளி மைதானத்தில் காலை, மாலை வேளைகளில் பொதுமக்கள்  நடைபயிற்சி மேற்கொண்டு  வருகின்றனர். இப்பள்ளியில் மன்னர் கால பாரம்பரியமான  பழைய கட்டிடங்கள்  மற்றும் நவீன புதிய கட்டிடங்களும் உள்ளன.

இந்த  நிலையில் கடந்த 2  மாதங்களுக்கு முன்பு 3 வாலிபர்கள் கையில் கம்புடன் பள்ளி  வளாகத்தில்  அதிகாலை அத்துமீறி புகுந்து கட்டிடங்களில் உள்ள கண்ணாடி  ஜன்னல்கள் மற்றும்  டியூப் லைட்டுகளை அடித்து நொறுக்கி ெசன்றனர். இது  குறித்து கோட்டாறு  காவல் நிலையத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயன் புகார்  செய்தார்.
அந்த  வாலிபர்கள் கண்ணாடி மற்றும் மின்விளக்குகளை உடைக்கும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளும்  போலீசாரிடம்  வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 2 மாதங்களை கடந்தும் இதுவரை அந்த  கும்பலை  போலீசார் கைது செய்யவில்லை. இது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை    ஏற்படுத்தி உள்ளது.

Tags : SSL ,
× RELATED நித்திரவிளை அருகே வீட்டின் மீது சாய்ந்த தென்னை மரம்