×

எட்டயபுரம் அருகே 27 பவுன் நகை மாயம்

எட்டயபுரம், நவ.28:  மதுரை வில்லாபுரம் சக்திவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன் மனைவி தங்கபுஷ்பம்(34). இவர் கடந்த 20ம் தேதி மதுரையிலிருந்து பஸ்சில் எட்டயபுரம் வந்தவர், பின்னர் ஆட்டோவில் எட்டயபுரம் அருகே உள்ள சின்னமலைக்குன்று கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலையில் பேக்கில் பார்த்தபோது அதில் வைத்திருந்த 27 பவுன் நகையை காணவில்லை இதனை யாரிடமும் சொல்லாத  அவர் மறுநாள் 22ம் தேதி தூத்துக்குடியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனது கணவரிடம் தெரிவித்தார். இதனையடுத்து இருவரும் சின்னமலைக்குன்று வீட்டில் தேடிப்பார்த்தும் நகை கிடைக்கவில்லை, இதனையடுத்து எட்டயபுரம் போலீசில் கணேசன் நேற்று புகார் செய்தார். இது குறிதது  போலீசார் வழக்கு பதிவு செய்து நகை மதுரையிலிருந்து வரும் வழியில் தவறி விட்டதா அல்லது வீட்டில் காணாமல் போய்விட்டதா? என விசாரித்து வருகின்றனர்.

Tags : Ettayapuram ,
× RELATED மூதாட்டியிடம் நகை பறிப்பு