×

அஞ்செட்டியில் பயிர் காப்பீடு திட்ட பயிற்சி

தேன்கனிக்கோட்டை, நவ.28:  அஞ்செட்டியில், பயிர் காப்பீடு திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை தாலுகா தளி வட்டார வேளாண்மை துறை சார்பில், மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் அஞ்செட்டியில், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகம் தலைமை தாங்கி ஒருங்கிணைந்த பண்ணையம், பிரதம மந்திரி பயிர் பாதுகாப்பு திட்டம் மற்றும் மானாவாரி பயிர் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

இயற்கை பேரழிவு மற்றும் வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் ஏற்படும் நஷ்டங்களை பயிர் காப்பீடு செய்வதன் மூலம் திரும்ப பெறலாம் எனவும், நெல் சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ₹434 வீதம் செலுத்தினால் ₹28,900 வரை இழப்பீடு பெறலாம் எனவும் தெரிவித்தார். இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற வரும் 30ம் தேதி கடைசி நாள் ஆகும். உதவி வேளாண் அலுவலர் கோவிந்தராஜ் உழவன் செயலி குறித்து விளக்கி கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஸ்ரீநாத், சிந்தனா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED துப்புரவு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது