×

கிருஷ்ணகிரியில் மிலாடி நபி விழா

கிருஷ்ணகிரி, நவ.28: கிருஷ்ணகிரியில் நாளை (29ம் தேதி) ஜண்டாகல்லி நௌஜவான் கமிட்டி சார்பில் மிலாடி நபி விழா நடைபெறுகிறது.  கிருஷ்ணகிரி புதுப்பேட்டை 22வது வார்டில், ஜண்டா கல்வி நௌஜவான் கமிட்டி சார்பில் நாளை(29ம் தேதி) பகல் 12 மணிக்கு மிலாடி நபி விழா நடைபெறுகிறது. விழாவிற்கு கமிட்டியின் தலைவர் பலூன்(எ)மக்தூம், முன்னாள் கவுன்சிலர் கராமத், பொருளாளர் நதீம் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். தவுலதாபாத் சுன்னத் ஜமாத் துணைத் தலைவர் முகமதுயூசுப், செயலாளர் சாப்ஜான், பொருளாளர் முகமதுயஹியா, துணை செயலாளர் பஷீர் முன்னிலை வகிக்கின்றனர். முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் வரவேற்கிறார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., பங்கேற்று 200 பேருக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கி பேசுகிறார். விழாவினையொட்டி ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கமிட்டியின் துணைத் தலைவர் முகமத்அசரார், செயலாளர் சலாவுதீன், துணை செயலாளர் முசக்கீர், பொருளாளர் காதர்பாஷா, துணை பொருளாளர் அமீர், தமுமுக மின்னல் பைரோஸ் மற்றும் முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

Tags : Milady Prophet Festival ,Krishnagiri ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்