×

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பொறியியல் இயந்திரங்கள் பராமரிப்பு பயிற்சி

தர்மபுரி, நவ.28: வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ், பொறியியல் இயந்திரங்கள் குறித்த பராமரிப்பு பயிற்சியில் சேர விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக, திருச்சி வேளாண்மை பொறியியல் கல்லூரியில் இளைஞர்களுக்கான வேளாண் இயந்திரங்களை இயக்குதல், பழுதினை நிவர்த்தி செய்தல் மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சி, 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது. இப்பயிற்சி உத்தேசமாக அடுத்த மாதம் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. இதில், ஏற்கனவே வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் ஏற்படுத்திய விவசாயிகளுக்கு, முன்னுரிமை வழங்கப்படும். இதர ஆர்வமுள்ள இளைஞர்களும் இப்பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.

மேலும் பயிற்சியில் கலந்துகொள்ளும் விவசாயிகளுக்கு, தங்கும் இடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள், இளைஞர்கள் வரும் 30ம் தேதிக்குள், தர்மபுரி செயற்பொறியாளர்(வே.பொ) மற்றும் உதவிசெயற் பொறியாளர்(வே.பொ) ஆகியோரை 04342- 230948 என்ற தொலைபேசி எண்ணிலும் மற்றும் அரூர் கோவிந்தசாமி நகரில் உள்ள உதவி செயற்பொறியாளரை(வே.பொ) 04346-223839 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். வேளாண் இயந்திரங்களை இயக்குதல், பழுதினை நிவர்த்தி செய்தல் மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா