×

சீனா சோலார் பேனல் தொழில் செய்வதாக கூறி திருச்சி தொழிலதிபரிடம் ரூ.1 கோடி மோசடி

திருச்சி,  நவ. 28: சீனா சோலார் பேனல் தொழில் செய்வதாக கூறி திருச்சி தொழிலதிபரிடம்  ரூ.1 கோடி மோசடி செய்த வியாபாரிகள் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை  நடத்தி வருகின்றனர். திருச்சி தில்லைநகரை சேர்ந்தவர் சங்கரலிங்கம்,  கட்டுனர். இவர் திருச்சியில் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை  கட்டி விற்பனை செய்து வருகிறார். அத்துடன் சோலார் பேனல் வியாபாரமும் செய்து  வருகிறார்.  மதுரை டிடிகே ரோட்டை சேர்ந்த தர் என்பவரும், சென்ைன  திருவள்ளூர் காட்டுபாக்கத்தை சேர்ந்த ராமசுப்பிரமணி (எ) ரவி ஆகிய இருவரும்  கூட்டாக இணைந்து கோவை மற்றும் மதுரையில் சோலார் பேனல் வியாபாரம் செய்து  வருகின்றனர்.
தொழில் ரீதியாக சங்கரலிங்கத்திற்கும் தருக்கிடையே  பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து சங்கரலிங்கத்திடம்,  சீனாவில் இருந்து சோலார் பேனல் இறக்குமதி செய்து விற்பனை செய்தால் நல்ல  லாபம் கிடைக்கும் என கூறினர். இதை நம்பிய சங்கரலிங்கம் தில்லைநகரில் உள்ள  தனியார் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 கோடியை கடந்தாண்டு மேமாதம் தருக்கு  அனுப்பினார்.

சில நாட்களில் தர் ரூ.1 கோடியே 80 லட்சத்து 39  ஆயிரத்து 295 சீனாவுக்கு அனுப்பியிருப்பதாக ஒரு போலி பில் தயாரித்து  சங்கரலிங்கத்திடம் காட்டி உள்ளார். இதில் சந்தேகம் அடைந்த சங்கரலிங்கம்,  தரின் வங்கி கணக்கை ஆய்வு செய்தார். அப்போது அவர் வெறும் ரூ.80,39,295ஐ  மட்டும் சீனாவுக்கு அனுப்பி இருந்தது தெரியவந்தது. தொகைக்கு முன்னால் 1ஐ  சேர்த்து போலி பில் தயாரித்தது தெரியவந்தது. தன்னிடம் ரூ.2 கோடி வாங்கி  கொண்டு 80 லட்சம் ரூபாய் மட்டுமே அனுப்பி இருந்ததால் சங்கரலிங்கம்  தனது  பணத்தை தரும்படி கேட்டார். அதற்கு அவர்கள் 2 பேரும் பணம் தர  மறுத்தனர். இது குறித்து சங்கரலிங்கம் திருச்சி மாநகர குற்றப்பிரிவு  போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார். பில்லில் குளறுபடி செய்து வியாபாரிகள் கைவரிசை

Tags : Chiranjeevi ,businessman ,China ,
× RELATED ரூ.111 கோடி போதை பொருள் பதுக்கிய தொழிலதிபர் கைது