×

நெற்பயிரை குருத்துப்பூச்சி தாக்குதலில் இருந்து மீட்பது எப்படி?

வலங்கைமான், நவ. 28: வலங்கைமான் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் விடுத்துள்ள  செய்திக்குறிப்பு:  வலங்கைமான் வட்டாரத்தில் தற்பொழுது  சம்பா, தாளடி பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தூர் கட்டும் நிலை மற்றும் வளர்ச்சி நிலையில் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தழைச்சத்து பரிந்துரைக்கு அதிகமாக இட்ட நெல்வயல்களில் இலைகள் மிகுந்த பச்சை நிறத்தில் காணப்படுகின்ற இடத்தில் குருத்துப்பூச்சி, இலைசுருட்டுபுழு ஆகியவை பயிரை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பரிந்துரை செய்யப்படும் தழைச்சத்து அளவினை இட்டு நெற்பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பதோடு பூச்சி மருந்து செலவினையும் தவிர்க்கலாம்.இலைசுருட்டுப்புழு முட்டை தட்டையாக முட்டை வடிவத்தில்  மஞ்சளான வெள்ளை நிறத்தில் காணப்படும். புழு பச்சையான நிறத்தில் ஒளி கசியும் தன்மை கொண்டு விளங்கும். உயிரியல் முறையில்  நெல் வயல்களில் பறவை குடில் அமைத்து கட்டுப்படுத்தலாம். மேலும்  நெல் வயல் வரப்புகளில் சூரியகாந்தி, உளுந்து, பயறு மற்றும் என் போன்றவற்றை பயிரிடலாம். வேப்ப எண்ணை கரைசல் அல்லது அசாடிராக்டின் மருந்தை தெளிக்கலாம். வேதியியல் முறையில் கார்டாப் ஹைட்ரோகுளோரைடு மருந்து ஏக்கருக்கு  400 கிராம் அல்லது பேம் மருந்து ஏக்கருக்கு  20 மி.லி என்ற அளவில் தெளிக்கலாம். பயிர் பாதுகாப்பு மருந்தை தெளிக்கும் போது காலை அல்லது மாலை நேரங்களில் தெளிப்பது நல்ல கட்டுப்பாட்டை தரும் என தெரிவித்துள்ளார்.

Tags : paddy stem attack ,
× RELATED பள்ளங்கோயில் கிராமத்தை...