×

வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கியவர்களை கைது செய்யாவிட்டால் இன்று முதல் பணிகள் புறக்கணிக்கப்படும்

பட்டுக்கோட்டை, நவ. 28: பணியில் இருந்தபோது வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கியவர்களை கைது செய்யாவிட்டால் கஜா புயல் பாதிப்பு கணக்கெடுப்பு பணி இன்று முதல் பணிகள் புறக்கணிப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் அத்திவெட்டிபிச்சினிக்காடு கிராமத்தில் பணி செய்து கொண்டிருந்தபோது அதே கிராமத்தை சேர்ந்த சிலர் அவரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், மதுக்கூர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக இன்றைக்குள் (நேற்று) கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் இன்று முதல் தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊரக வளர்ச்சித்துறையினரும் பணிகளை புறக்கணிப்பது என்று முடிவு செய்தனர். இதைதொடர்ந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் முடிவு

Tags : attacker ,
× RELATED பந்தலூர் அருகே யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதி