×

கஜாபுயல் பாதிப்பு சீரமைப்பு பணிக்கு வெளிமாவட்டத்தில் இருந்து கந்தர்வகோட்டைக்கு வந்த மின்கம்பங்கள்

கந்தர்வகோட்டை, நவ.28: கந்தர்வகோட்டையில் கஜா புயல் தாக்குதல் காரணமாகபல்வேறுசேதங்கள் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் இன்று வரை பலபகுதிகளில் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் கந்தர்வகோட்டைபகுதிக்குபுதிதாகமின்கம்பங்கள் நேற்று பல்வேறுமாவட்டங்களிலிருந்து வந்தன. கந்தர்வகோட்டை சுற்றுவட்டாரபகுதிகளில் கிராமங்களுக்குதேவைப்படும் மின்கம்பங்கள் நேரிடையாக கொண்டு செல்லப்படுகின்றன. கந்தர்வகோட்டையில் நேற்றுபட்டுக்கோட்டைசாலைமற்றும் ஊராட்சிஒன்றியஅலுவலகம் அருகில் ஆயிரகணக்கானமின்கம்பங்கள் புதியதுகொண்டுவரப்பட்டு இறக்கப்பட்டது.  அருகிலிருக்கும் கிராமங்களுக்கு மின்கம்பங்கள் கொண்டுவரப்படும் என தெரிவித்தாலும்,தங்கள் பகுதிக்குமின்கம்பங்களைகிடைக்கும் வாகனம் மூலம் கொண்டுசெல்லும் பணியில் கிராமமக்கள் நேரிடையாக களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். நேற்று நாரிகொல்லைபட்டிகிராமத்தினர் தங்கள் கிராமத்திற்கு தேவையான மின்கம்பங்களை டிராக்டர் மூலம் எடுத்து சென்றனர். அனைத்துபகுதிகளுக்கும் மின்கம்பங்களை விரைந்துஅனுப்பி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எடு்த்து செல்வதில் கிராமத்தினர் மும்முரம்

Tags : outskirts ,Gandharvatto ,
× RELATED துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி...