×

ஒரே வாரத்தில் கொப்பரை தேங்காய் விலை ரூ.4 உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

க.பரமத்தி, நவ. 28:   கரூர் மாவட்டத்தில் கிராமப்புற பகுதியில் ஏராளமான தென்ணை மரங்களை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். தங்களது தேவைக்கு மேல் உள்ள தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுக்கின்றனர். பிறகு மீதம் உள்ள பருப்பினை வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் நடக்கும் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர். நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் 129 மூட்டைகளை ஏலம் விடப்பட்டது. அதில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.91க்கும்,  அதிக பட்சமாக கிலோ ரூ.97க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட ரூ.4அதிகமாக ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 8107 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. தேங்காய் சராசரியாக ஒரு கிலோ ரூ.20க்கும், அதிக பட்சமாக ரூ.25க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.1 குறைந்து ஏலம் போனது.

Tags : Coca-Cola ,
× RELATED கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும்...