×

சிறு, குறு தொழிலுக்கு வங்கிகள் அதிக கடன் வழங்க முன்வர வேண்டும்

பெரம்பலூர்,நவ.28: சிறு, குறு தொழிலுக்கு வங்கிகள் அதிக கடன் வழங்க முன்வர வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில்  வங்கியாளர்கள் கூட்டம் நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் நாராயணன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் நவீன்குமார், ரிசர்வ் வங்கியின் வளர்ச்சி மேலாளர் தியாகராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்திற்கான 2019-20ம் ஆண்டுக்கு நபார்டு வங்கியின் ரூ.3,965கோடிக்கான கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் சாந்தா வெளியிட்டுப் பேசியதாவது:
நபார்டு வங்கியானது வளம் சார்ந்த கடன்திட்ட அறிக்கையில் குறுகியகால பயிர் கடன், வேளாண் தொழில் சார்ந்த காலக்கடன் ஆகியவற்றின் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் வங்கியின் விவசாய தானிய சேமிப்பு கிட்டங்கிகளுக்கு, உணவக பதனிடு தொழில்களுக்கு, ஏற்றுமதி தொழில்களுக்கு, கல்விக்கடனுக்கு, புதிய வீடுகள் கட்டுவதற்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு, சுய உதவிக்குழுக்கள், கூட்டு பொறுப்பு குழுக்களுக்கு கொடுக்க கூடியகடன் இந்த திட்ட அறிக்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை விரைவாக நிறைவேற்றி, வேளாண் மற்றும் அதனை சார்ந்த தொழில்களை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நபார்டு வங்கியின் 2019-20ம் ஆண்டிற்கான இந்த வளம் சார்ந்த கடன்திட்டமானது, விவசாயிகளை கால்நடை வளர்ப்புடன், உள்நாட்டு மீன்வளர்ப்பு, தேனீவளர்ப்பு போன்ற தொழில்களிலும், விவசாயம் சாரா தொழில்களிலும் ஈடுபடுத்தி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க செய்தலாகும். மேலும் நபார்டின் வளம் சார்ந்த கடன் திட்டத்தில், பகுதி சார்ந்த திட்டங்களாக பெரம்பலூர் மாவட்டத்தின் ஒன்றியங்களில் ஆடு மற்றும் கறவைமாடு வளர்ப்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறுகுறு விவசாயிகளின் வருமானத்திற்கு உத்தரவாதம் கொடுக்கும், செயல்பாடிற்காக மாவட்டத்திலுள்ள சிறுகுறு விவசாயிகளுக்கு கடன்வழங்க வேண்டும். மொத்த வளம்சார்ந்த கடனாற்றல் மதிப்பீடான ரூ.3,965 கோடியில் ரூ.3,238 கோடி வேளாண்துறைக்கும், ரூ.274 கோடி சிறுகுறு தொழில்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி கல்வி, வீடு, ஏற்றுமதி கடன்களுக்காகவும், தனித்தனியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கியானது சிறு குறு தொழில்களுக்கு அதிகளவில் கடன் வழங்க முன்வர வேண்டும். வங்கி கிளைகள் தங்களது ஆண்டு திட்ட அறிக்கையை தயாரிக்கும்பொழுது நபார்டு வங்கியின் அறிக்கையை பயன்படுத்தியே தயாரிக்க வேண்டும் என தெரிவித்தார். கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் உதவி பொதுமேலாளர் அருள், மாவட்ட மகளிர் திட்ட உதவித்திட்ட அலுவலர் சரவண பாண்டியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர். கலெக்டர் வேண்டுகோள்

Tags : Banks ,businesses ,
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்