×

காயலான் கடையில் தீ விபத்து

துரைப்பாக்கம், நவ. 28: காயலான் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.பெருங்குடி பகுதியில், மாநகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. பெருங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் சேரும் குப்பை சேகரிக்கப்பட்டு நாள்தோறும் டன் கணக்கில் இந்த குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.குப்பைக்கிடங்கை ஒட்டி சில காயலான் கடைகள் உள்ளன. பெருங்குடி மற்றும் சுற்றி இருக்கும் பகுதிகளை சேர்ந்த பலர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு உள்ள பழைய இரும்பு, பிளாஸ்டிக், பாட்டில் ஆகியவற்றை பொறுக்கி, காயலான் கடைகளில் விற்பனை செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு இரும்பு கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்து அக்கம்பக்கத்தினர் துரைப்பாக்கம் காவல்நிலையத்துக்கு தெரிவித்தனர். தகவலறிந்து போலீசார் மற்றும் துரைப்பாக்கம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். அதற்குள் இரும்பு கடை முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து, துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகள் தீ வைத்தார்களா? அல்லது ேவறு ஏதேனும் காரணமா? என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : Fire accident ,store ,Kayalan ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...