×

மாவூற்று வேலப்பர் கோயிலில் நோய் பாதித்த நாய்களை கண்டு பக்தர்கள் ஓட்டம் அப்புறப்படுத்த கலெக்டர் ஆணையிடுவாரா?

ஆண்டிபட்டி, நவ.28: ஆண்டிபட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர் கோயிலில் ரேபிஸ் நோய் பாதித்த நிலையில் சுற்றித்திரியும் நாய்களின் தொல்லையால் பக்தர்கள் அலறியடித்து ஓடுகின்றனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டிக்கு தெற்கே 18 கி.மீ. தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மீது அமைந்துள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மிகவும் பழமையான இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் அதிகம் வருகின்றனர்.இந்நிலையில் கோயில் வளாகப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட நோய்வாய்ப்பட்ட நாய்கள் உடல் முழுவதும் புண்களுடன், முடி உதிர்ந்த நிலையில் சுற்றித்திரிறது. குறிப்பாக பக்தர்கள் செல்லும் படிக்கட்டுகளில் கூட்டம், கூட்டமாக நின்று சண்டையிடுவதால் பக்கதர்கள் நாய்களை கண்டு அலறியடித்து  ஓட்டம் பிடிக்கின்றனர்.

இதுமட்டுமின்றி படிக்கட்டுகளில் நாய்கள் அசுத்தம் செய்து வைப்பதால் பக்தர்கள் படிக்கட்டில் நடப்பதற்கு தயங்கி வருகின்றனர். இது குறித்து பக்தர்கள் கூறுகையில், கோயில் வளாகப் பகுதியில் மட்டுமின்றி சுவாமி தரிசனம் செய்யும் இடங்களில் கூட நோய் தாக்கிய நாய்கள் அதிகம் காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் பொங்கல் உள்ளிட்ட நேத்திக்கடன்களை செலுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் நாய்களுக்கு வியாதி முற்றி உடல் முழுவதும் புண்கள் நிறைந்து குறைக்கும் போதும், படுத்து உருளும் போதும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இது சம்மந்தமாக பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக கோயில் வளாக பகுதியிலுள்ள  நோய்வாய்ப்பட்ட நாய்களை பிடித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : collector ,devotees ,mango groves ,
× RELATED அரியானாவில் சுற்றுலா பேருந்து...