×

தேனி மாவட்டத்தில் 15வது அமைப்பு தேர்தல் உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நாளை முதல் நடக்கிறது

கம்பம், நவ. 28: தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் அறிக்கை, தேனி மாவட்டத்தில் திமுக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டபடி 15வது அமைப்பு தேர்தல் உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நாளை வியாழன் சின்னமனூர் நகரத்திலும், வெள்ளிக்கிழமை கூடலூர் நகரம், கம்பம் நகரம், கம்பம் ஒன்றியம், உத்தமபாளையம் ஒன்றியத்திலும், சனிக்கிழமை சின்னமனூர் ஒன்றியம், போடி நகரம், போடி ஒன்றியம், தேனி ஒன்றியத்திலும், ஞாயிற்றுக்கிழமை ஆண்டிபட்டி ஒன்றியம், கடமலை மயிலை ஒன்றியம், பெரியகுளம் ஒன்றியம், பெரிய குளம் நகரம், திங்கட்கிழமை தேனி நகரம் பகுதிகளிலும் வழங்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் திமுக தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள கழக கொள்கைபரப்பு துணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் அன்பழகன் கலந்துகொள்கிறார். எனவே மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சிக்கழக செயலாளர்கள், உறுப்பினர் படிவம் பதிவு செய்தவர்கள், உறுப்பினர் உரிமைச் சீட்டு அனுப்ப வேண்டிய முகவரி எனுமிடத்தில் பெயர் குறிப்பிட்டுள்ளவர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு உறுப்பினர் உரிமைச் சீட்டு முறையாகப் பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.

Tags : organizers ,Organizational Electoral Commission ,Theni district ,
× RELATED அழகும், மருத்துவமும் நிறைந்த கோழிக்கொண்டை