×

7 இடங்களில் மயான சாலைகளை தார் சாலையாக மாற்ற கிராம சபை கூட்டத்தில் முடிவு

கொள்ளிடம்,நவ.28: கொள்ளிடம் அருகே மாதிரவேளூரில் உள்ள 7 மயான சாலைகளை தார் சாலையாக மாற்ற கிராம சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நூலகர் ஜெயராமன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் முருகன் வரவேற்றார். அங்கன்வாடி அமைப்பாளர் நிர்மலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாதிரவேளூர் பெரியதெரு, திருவள்ளுவர்தெரு, தெற்குதெரு, வடக்குதெரு, பாலுரான்படுகை, பூங்குடி மற்றும் காந்திநகர் ஆகிய இடங்களில் பூமிக்கடியில் புதிய குடிநீர் குழாய்கள் புதைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பது கீழவாடி கிராமத்தில் உள்ள இரண்டு மண் தெரு சாலைகளையும் தார் சாலையாக மாற்றுவது மாதிரவேளூரில் உள்ள 7 மயான சாலைகளை தார் சாலையாக மாற்றுவது மற்றும் பழுதடைந்த 7 மயான கொட்டகைகளை அகற்றி விட்டு புதிய மயான கொட்டகை கட்டுவது மாதிரவேளூரில் இருந்து வடரெங்கம் செல்லும் 4 கிலோ மீட்டர் தூர பழுதடைந்த  தார் சாலையை மேம்படுத்துவது. மாதிரவேளுர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் மழை நீர் வடிகால் கட்டமைப்பு கட்டுதல். கீழதெரு எருக்கன் வாய்க்கால் கண்டியமடைக்கு செல்லும் 1 கிலோ மீட்டர் தூர மண் சாலையை தார் சாலையாக மாற்றுவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுநூலகர் குணசேகரன் மற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணித்தள பொறுப்பாளர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

Tags : meeting ,places ,Gram Sabha ,tar roads ,
× RELATED கிராம சபை கூட்டங்களில் மீண்டும்...