×

காளையார்கோவில் பகுதியில் இரண்டு மாதமாக பூட்டி கிடக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்

காளையார்கோவில், நவ. 28:காளையார்கோவிலில் தற்போது இது வரை இல்லாத அளவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது தண்ணீரை தேடி பலகிலோமீட்டர் அலையும் பொதுமக்கள்  காளையார்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் போதியமழை இல்லாமல் நீர்நிலைகள் முற்றிலும் வற்றிவிட்டன. இந்நிலையில் பொதுமக்கள் கிணறுகள், போர்வெல்களை நம்பி இருந்தனர். தற்போது அவைகளும் வற்றிவிட்டது. இதனால் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலமாக பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் தொட்டிகளின் போர் வெல்கள் குறைந்த ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் பாதி தெட்டி நிறைவதே கஸ்டமாக உள்ளதால் பெரும் பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் செட்டு செட்டாக வடியும் நீரை பிடிக்க பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

தண்ணீர் பிரச்சனைக்கு உள்ளாட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2016ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பரமக்குடி ரோட்டில் டெலிபோன் ஆபீஸ் எதிர்புறம் ஒரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் திட்டமே 2 கிலோ மீட்டர் சுற்றளவில் விரிவாக்கம் ஆகியுள்ள காளையார்கோவில் பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தது. தற்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் இரண்டு மாதத்திற்கு மேல் பூட்டிய நிலையில் உள்ளது.
 இதனால் தண்ணீரைத் தேடி பொதுமக்கள் அலைகின்றனர். இதே நிலை நீடித்தால் பொதுமக்கள் தண்ணீருக்காக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும்  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் போன்று ஒவ்வொரு பகுதிகளிலும் அமைக்கப்பட வேண்டும். குடிநீர் பஞ்சத்தை போக்க உள்ளாட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Tags : drinking water station ,area ,Kalaiyorko ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...