×

சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் உற்சவம் பக்தர்கள் திரண்டு தரிசனம் கார்த்திகை தீபத்திருவிழாவின் நிறைவையொட்டி

திருவண்ணாமலை, நவ.28: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் நிறைவையொட்டி சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் நேற்று உற்சவம் நடந்தது. பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, கடந்த 23ம் தேதி மகாதீபம் ஏற்றப்பட்டது. தீபத்திருவிழாவை ெகாட்டும் மழையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற தீபத்திருவிழாவின் உற்வசத்தின் தொடக்கமாக, 3 நாட்கள் எல்லை காவல் தெய்வ வழிபாடும், ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்து முடிந்தது.
தீபத்திருவிழாவின் நிறைவாக, நேற்று முன்தினம் இரவு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், பஞ்சமூர்த்திகளில் ஒருவரான சண்டிகேஸ்வரர் அலங்கார ரூபத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் பவனி வந்தார்.

இதனை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், கடந்த 23ம் தேதி 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபம், தொடர்ந்து 5வது நாளாக நேற்று முன்தினம் காட்சியளித்தது. வரும் 3ம் தேதி வரை மலைமீது மகாதீபத்தை தரிசிக்கலாம்.

Tags : Celebration ,Karthikeya Deepam ,
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்