பைக் திருடிய வாலிபர் கைது

முஷ்ணம், நவ. 28: அரியலூர் மாவட்டம் சுண்டகுடி கிராமத்தை சேர்ந்த சசிகுமார்(25) என்பவர் நேற்று காலை முஷ்ணம், பூவராகவ சுவாமி திருக்கோயிலுக்கு பைக்கில் வந்தார். சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இதுகுறித்து முஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடன் முஷ்ணம் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் பேருந்து நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனை தொடர்ந்து அவரை காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில், அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ஜோசப் மகன் சின்னராசு என்கிற ராஜா(21) என்பதையும், சசிகுமார் பைக்கை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

முஷ்ணம் அருகே புதுகுப்பத்தில் சின்னராசு பாட்டி வீடு உள்ளது. வாகனத்தை திருடி சென்று பாட்டி வீட்டில் மறைத்து வைத்து விடுவாராம். பின்னர் சிறிது நாள் கழித்து அங்கிருந்து எடுத்து சென்று விற்பனை செய்து நண்பர்களுடன் மது மற்றும் உல்லாச வாழ்க்கையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து சின்னராசு மீது வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். மேலும், பைக்கையும் பறிமுதல் செய்தனர். பின்னர் விருத்தாசலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

>