×

கீழப்பாவூர் கோயில் அருகே கழிப்பிடத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை கலக்கிய மாயாண்டி சுடலை வேடதாரிகள்

நெல்லை, நவ. 27:  கீழப்பாவூர் பகுதியில் மாயாண்டி சுடலை கோயிலுக்கு அருகே கட்டண கழிப்பிடம் அமைத்திருப்பதைக் கண்டித்து இந்து தேசிய கட்சி சார்பில் சுமார் 10 பேர்  மாயாண்டி சுடலை வேடம் அணிந்து கலெக்டர் அலுவலகத்தில் உலா வந்தனர்.
இந்து மக்கள் கட்சித் தலைவர் எஸ்.எஸ்.எஸ் மணி மற்றும் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அதில் சுமார் 10 பேர் மாயாண்டி சுடலை வேடம் அணிந்து, கையில் கருங்காலி கம்புகள் ஏந்தி, சல்லடம் குல்லா அணிந்து சாமியாட்டத்திற்கு தயாராக வந்திருந்தனர். திருநீறு கப்பரையோடு மணிகள் ஒலிக்க கலெக்டர் அலுவலக வெளிவாசலில் உலா வந்தனர்.பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனு: கீழப்பாவூர் பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் அங்குள்ள மாடன் என்ற மாயாண்டி சுடலை குல தெய்வத்தை வணங்கி வருகின்றனர். இக்கோயிலில் நித்திய கால பூஜை செய்வதோடு மொட்டை போட்டு காதுகுத்தி வருகின்றனர்.

கோயில் அருகே உள்ள ஊரணியில் பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளை குளிப்பாட்டவும் தண்ணீர் பயன்பாட்டில் உள்ளது. மாயாண்டி கோயில் அருகே சுடுகாடு உள்ளது. அங்கு உடல்களை எரியூட்டிய பின்னர் சாம்பலை ஊரணியில் கரைக்கின்றனர்.
இந்நிலையில் சாமி சிலை பீடத்திற்கு அருகே நெல்லை பாராளுமன்ற எம்.பி. நிதியில் கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கிருந்து கழிப்பறை கழிவுகள் வெளியேற ஊரணி பெரிய குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசும் அபாயம் உள்ளது. மேலும் கழிப்பறை கழிவுகள் ஊரணியில் கலக்கும் நிலை காணப்படுகிறது. எனவே கட்டண கழிப்பிட வேலையினை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Mayadhi ,spoon hunters ,collector ,Kilavapoor ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...