×

மாவட்ட விளையாட்டு போட்டி வி.எஸ்.ஆர். பள்ளி சாம்பியன்

திசையன்விளை, நவ. 27:  திசையன்விளையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே, யோகா, பேட்மிட்டன் போட்டிகளில் வி.எஸ்.ஆர்.இண்டர்நேசனல் பள்ளி அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன்ஷிப் கோப்பை வென்றது. மாவட்ட அளவிலான பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போட்டிகள் திசையவிளை வி.எஸ்.ஆர் பள்ளியில் இரண்டு நாட்கள் நடந்தது. போட்டிகள் வயது அடிப்படையில் 3 பிரிவுகளாக நடந்தது. இதில் திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேசனல் பள்ளி முதல் இடத்தையும், திருநெல்வேலி சரஸ்வதி வித்யாலயா பள்ளி 2ம் இடத்தையும், வள்ளியூர் வேதிக் வித்யாஸ்ரம் பள்ளி 3ம் இடத்தையும் பெற்றது.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி இயக்குநர் சௌமியா, துணை முதல்வர் எலிசபெத் மற்றும் மாணவ மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர்.

Tags : District Sports Competition VSR School ,
× RELATED லாரி மோதி விவசாயி பலி