×

கடையநல்லூர் குமந்தாபுரத்தில் கட்டப்படும் உரக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கலெக்டரிடம் கோரிக்கை

நெல்லை, நவ. 27: கடையநல்லூர் குமந்தாபுரத்தில் கட்டப்பட்டு வரும் உரக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். கடையநல்லூர் அருகேயுள்ள குமந்தாபுரம் 1வது வார்டு ஆதிதிராவிடர் சமுதாய நாட்டாண்மைகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீசிடம் அளித்த மனுவில்: எங்கள் ஊரில் தெற்கு பகுதியில் காளியம்மன் கோயில் அருகே அரசு புறம்–்போக்கு நிலத்தில் கடையநல்லூர் நகராட்சியால் உரக்கிடங்கு பெயரில் கட்டுமான பணிகள் நடக்கிறது. இது அமைந்தால் இதன் மேல்பகுதியில் ஆதிதிராவிட நலத்துறையால் வழங்கிய காலனி வீடுகள் சுமார் 100 வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். இதன் வடக்கு பகுதியில் ஆரம்ப பள்ளி உள்ளது. அதனையொட்டி மாற்று சமூக மக்கள் வசிக்கின்றனர். இதற்கு கிழக்கு பகுதியில் ஆதிதிராவிடர் மக்கள் சுமார் 300 குடும்பத்தார் வசித்து வருகின்றனர்.

இதனால் அங்கு உரக்கிடங்கு அமையபெற்றால் அப்பகுதி பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாக நேரிடும். இதனால் அதனை மாற்றுப்பகுதியில் அமைக்க வேண்டி கடையநல்லூர் நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தும், கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
எங்களுக்கு சாலை வசதிகள், வாறுக்கால்கள் வசதிகள் செய்து தர வேண்டும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுகாதார வளாகம் செயல்படுத்த வேண்டும். எங்களது பகுதிகளுக்கு மட்டும் வசதிகள் செய்து கொடுக்காமல் அருகேயுள்ள பகுதிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : collector ,location ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...