×

திருத்துறைப்பூண்டியில் ஆய்வு கூட்டம் பொதுமக்கள் கூறும் புகார்களை அன்று இரவுக்குள் தீர்க்க வேண்டும் அமைச்சர் அறிவுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, நவ.27: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகரம் மற்றும் ஒன்றிய பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் 11 நாட்களாகியும் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை. நகர பகுதியில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் நகரபகுதியில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும். கிராமங்களிலும் இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. . பல்வேறு மாவட்டங்களிருந்து நிவாரண பொருட்கள் கொண்டு வரும் போது கிராமங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் சாலையோரத்தில் உள்ளவர்களே வழி மறித்து பொருட்களை பெற்றுக்கொள்வதால் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விஸ்வகொத்தமங்கலம், பழையங்குடி, பூசலாங்குடி, பிஞ்சூயூர், அகரவயல், சிதம்பரகோட்டகம், தூத்தடிமூலை, ஆலிவலம், கீராந்தி, ஆதனூர் போன்ற பல்வேறு கிராமங்களுக்கு  தொண்டு நிறுவனம் மூலம் கொண்டு வரப்படும் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை. நிவாரண பொருட்கள் கிடைக்காத கிராமங்களுக்கு நிவாரணம் பொருட்கள் கிடைத்திட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செல்லூர்ராஜு பேசுகையில், அனைத்து கிராமங்களுக்கும் தேவையான உதவிகள் செய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த கிராமங்களில் உள்ள  முகாமிலும் அரிசி இல்லைஎன்று கூறகூடாது. அதிகாரிகள் போகும் போது அரிசி மூட்டைகளை  கொண்டு செல்ல வேண்டும்.

எங்கெல்லாம் அரிசி தேவையோ அங்கு உடனே அரிசி வழங்க வேண்டும். காலையில் போகும் போது பொதுமக்கள் புகார் தெரிவித்தால் அன்று இரவே தீர்த்துவைத்தால்தான் மக்களுக்கு நம்பிக்கை வரும்.என்றார். அமைச்சர் காமராஜ் பேசுகையில் புயலால் பாதித்த சேதமடைந்த மாணவர்களுக்கு புதியதாக புத்தகம், சீருடை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வெளிமாநில, வெளிமாவட்டத்திலிருந்து மின்சார ஊழியர்கள் வந்து பணியாற்றி வருகின்றனர். பொதுமக்கள் பிரச்னைகளை எவ்வளவு சீக்கிரம் நாம் தீர்த்து வைக்கிறாமோ அப்போதுதான் நமக்கு பிரச்னைகள் இல்லாமல் இருக்கும் என்றார்.

Tags : inquiry meeting ,minister ,Thiruthuraipothy ,public ,
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...