×

அட்மா திட்டத்தின் கீழ் மானாவாரி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

ஜெயங்கொண்டம்,நவ.27: ஆண்டிமடம் வட்டாரம் அழகாபுரம் கிராமத்தில் மானாவாரி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு ஆண்டிமடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சுகந்தி தலைமை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் பாலுசாமி மானாவாரி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். பயிற்சியில் மானாவாரி பயிர்களை தேர்வு செய்யும் பொழுது வறட்சி தாங்கி வளரும் ரகத்தினை தேர்வு செய்து அதற்குரிய பருவத்தில் சாகுபடி செய்ய வேண்டும் எனவும் மானாவாரி பயிர்களில் ஊட்டச்சத்து மேலாண்மையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, மக்னீசியசத்து ற்றாக்குறைகளும் பரவலாக தென்படுகின்னறன. மானாவாரி நிலங்களுக்கு ஊட்டச்சத்துக்கள் முறையே நெற்பயிருக்கு பூரியா, டீஏபி மற்றும் பொட்டாசியம் குளோரைடு பால் பிடிக்கும் பருவத்திலும் 10 நாள் கழித்தும் தெளிக்க வேண்டும். நிலக்கடலையில் 2.5 கிலோ டிஏபி, 1 கிலோ அம்மோனியம் சல்பேட், 500 கிராம் போராக்ஸ் உரம், 350 மில்லி பிளானோபிக்ஸ் ஆகியவற்றை 37.5 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பயிற்சியில் மானாவாரி சாகுபடி தொழில்நுட்ங்கள் குறித்த குறும்படம் பிக்கோ புரொஜெக்டர் மூலம் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. தற்போது சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்யப்பட்டு வருகின்றது. எனவே விவசாயிகள் உடனடியாக சம்பா பயிர் காப்பீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. நெல் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.443 செலுத்தி பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேருமாறு விவசாயிகளை வேளாண்மை உதவி அலுவலர் நித்தீஸ்வரன் கேட்டுக்கொண்டார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஆரோக்கியராஜ், ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார் வரவேற்றார்.

Tags : Adm ,
× RELATED தரகம்பட்டியில் அமைக்கப்பட்ட தார்...