×

கொள்ளிடம் அருகே வடகால் கிராம சாலை வாய்க்கால் பாலம் இடிந்து விழும் அபாயம் புதியதாக கட்ட கோரிக்கை

கொள்ளிடம்,நவ.27: கொள்ளிடம் அருகே வடகால் கிராம சாலையில் வாய்க்கால் குறுக்கே இடிந்து விழும் நிலையில் உள்ள பாலத்தை புதியதாக கட்ட கோரிக்கை விடப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடகால் மெயின்ரோட்டில் இருந்து வடகால் நடுத்தெருவிற்கு செல்லும் சாலையில் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் குறுகிய காலத்திலேயே இந்த பாலம் வலுவிழந்து அடிப்பகுதியில் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. வடகால் நடுத்தெருவிற்கு செல்லும் அனைவரும் பாலத்தை கடந்து செல்கின்ற போது அச்சத்துடனேயே
செல்கின்றனர். லாரி போன்ற கனரக வாகனங்கள் இப்பாலத்தை கடந்தால் பாலம் உடனடியாக உடையும் அபாயம் உள்ளதால் உடனடியாக பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட வடகால் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : bridge ,collapse ,village road ,Kollidam ,Vadakalai ,
× RELATED பாம்பன் சாலை பாலத்தில் இணைப்பு ஸ்பிரிங் பிளேட்கள் சேதம்