×

குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் மருதம்பட்டி காலனி மக்கள் கோரிக்கை

கரூர், நவ.27: கரூர் மாவட்டம் மணவாடி அடுத்துள்ள மருதம்பட்டி காலனி பகுதி மக்கள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: இந்த பகுதியில் ஆழ்குழாய் மோட்டார் பழுதடைந்து, தண்ணீரின்றி அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. எனவே, தண்ணீர் பிரச்னையை தீர்க்க புதிதாக மோட்டார் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். இதே போல், பாலராஜபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 100 நாள் திட்ட பயனாளிகள் வழங்கிய மனுவில், இந்த பகுதியில் 100 நாள் வேலை திட்டப்பணியில் ஒரு பெண்ணுக்கு மட்டும் திடீரென வேலை இல்லை என கூறி அனுப்பி விட்டனர். எனவே, அவருக்கு திரும்பவும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Maruthampatti ,
× RELATED துவரங்குறிச்சி அருகே குளம்போல் தேங்கிய மழை நீரால் விபத்து அபாயம்