×

35.66 லட்சத்தில் மூடநீக்கு கருவிகள்

புதுச்சேரி, நவ. 27:  புதுச்சேரி சமூக நலத்துறை இயக்குநர் சாரங்கபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரசின் சமூக நலத்துறையும், மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், தேசிய வாழ்வாதார சேவை மையமும் இணைந்து அலிம்கோ என்ற மத்திய அரசு நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச முடநீக்கு உபகரணங்கள் வழங்கும் ஏடிஐபி திட்டத்தின் கீழ் இலவச மூடநீக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான பயனாளிகளை தேர்வு செய்துள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மூடநீக்கு கருவிகள் வழங்கும் விழா இன்று (27ம் தேதி) காலை 10 மணியளவில சமூக நலத்துறை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

582 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.35.66 லட்சம் மதிப்புள்ள சக்கர நாற்காலி, காது கேட்கும் கருவிகள் உள்ளிட்ட முடநீக்கு உபகரணங்கள் மத்திய அரசினால் வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதல்வர், நல அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர், துணை சபாநாயகர், ஊசுடு மற்றும் கதிர்காமம் தொகுதி எம்எல்ஏக்கள் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்கு உபகரணங்களை வழங்கவுள்ளனர்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...